News November 2, 2025
கரூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நவ.1 முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
Similar News
News November 3, 2025
கரூரில் சோகம்: டாக்ஸி டிரைவர் தற்கொலை!

கரூர் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் சிவக்குமார். இவரது தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக குடும்பத்தில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் மன விரக்தி அடைந்த சிவக்குமார் நேற்று (நவம்பர் 2) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் அனுப்பப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!
News November 3, 2025
கரூர் மாணவிகளுக்கு உதவிய ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் பவுன்டேஷன் சார்பில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த, வைதீஸ்வரி, தர்ஷினி, மணிஷா ஆகிய மூன்று மாணவியர்களுக்கு உயர்கல்விக்கான கல்லுாரி கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக, நடிகர் ரஜினி காந்துக்கு நன்றி தெரிவித்து, மாணவியர்களின் சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது என கரூர் மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற பொறுப்பாளர் கீதம் ரவி தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
கரூர்: வயலூரில் பெட்டிக்கடையில் மது விற்ற பெண் கைது

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் அப்பாவு மனைவி தனம் (57). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான பெட்டி கடையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மது விற்ற தனம் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.


