News November 2, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News November 3, 2025
சிவகங்கை: பட்டா வைத்திருப்பவர்களுக்கு நற்செய்தி

சிவகங்கை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04575 240516 அணுகலாம். SHARE பண்ணுங்க.
News November 3, 2025
சிவகங்கை: இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சிவகங்கை நேருபஜாரை சேர்ந்த ஒளிமுகமது (31), இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று ஒரு அதிகாலை டீ கடைக்கு வந்த போது காரில் வந்த 3 நபர் ஒளிமுகமதுவை அரிவாளால வெட்டி தப்பித்துச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை சிவகங்கை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் அபாய கட்டத்தில் இருப்பதாக கூறி மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
சிவகங்கை: கல்யாணம் கைகூட இங்க போங்க.!

சிவகங்கை, பட்டமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். கடைசி வியாழன் தோறும் மூலவருடன் கூடிய ஆலமரத்தை 108 முறை சுற்றி வழிபட்டால் விரும்பிய பெண் மனைவியாக அமைவாள் என்பது ஐதீகம். 5 முறை ஆலயத்தை சுற்றி அங்கபிரதட்சணம் செய்து குழந்தை பேறு பெற்றவர்களும் அதிகம். நீங்களும் ஒருமுறை VISIT பண்ணி பாருங்களேன்.


