News November 2, 2025

தேனி: G.H-ல் இவை எல்லாம் இலவசம்!

image

தேனி அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்
1. மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவை
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அம்புலன்ஸ்
சிகிச்சையில் தாமதம் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் தேனி மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 04546-250387 – 261403 தெரிவியுங்க. இந்த பயனுள்ள தகவலை உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News November 3, 2025

தேனி: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 மனுக்கள்

image

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.11.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 228 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் பொதுமக்களிடமிருந்து அளிக்கப்பட்டன.

News November 3, 2025

தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

image

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 3, 2025

தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

image

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000 – ரூ.2,20,000 வரை வழங்கப்படும், கடைசி தேதி 16.11.2025 ஆகும். இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!