News November 2, 2025
‘SIR’ விவகாரத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

தமிழ்நாட்டில் ‘SIR’ வரும் 4-ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் நிலையில், ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க அதிமுக, தவெக உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SIR-ஐ அவசரமாக செய்யக் கூடாது. நடைமுறை சிக்கல்களை சரி செய்ய வேண்டும். SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதித் திட்டமா என பல கோணங்களில் ஆலோசிக்கப்படுகிறது.
Similar News
News November 3, 2025
ஆச்சரியப்பட வைக்கும் விலங்குகள்

நீச்சல் என்பது கடல் விலங்குகளின் இயற்கையான பண்பாக கருதப்படுகிறது. இருப்பினும், நிலத்தில் வாழும் பல விலங்குகள் நன்றாக நீந்தும் திறன் கொண்டவை. அவை என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களை ஆச்சரியப்பட வைத்த விலங்கு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
இந்திய அணியை பாராட்டிய அரசியல் தலைவர்கள்

இந்திய மகளிர் அணியின் வெற்றி எண்ணற்ற இளம் பெண்களை அச்சமின்றி கனவு காண வைக்கும் என்று ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். மகளிர் அணியின் தைரியம், மன உறுதி ஆகியவை இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் X-ல் பதிவிட்டுள்ளார். இதே போல மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ், ரேகா குப்தா, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
News November 3, 2025
BREAKING: விஜய்யின் அணியில் இணைந்தனர்

கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெகவில் உருவாக்கப்பட்ட தொண்டரணிக்கு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற IG ரவிக்குமார் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் இணைந்துள்ளனர். உளவுப்பிரிவு உள்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, ஓய்வு பெற்ற DSP-க்கள் சஃபியுல்யா, சிவலிங்கம், ADSP அசோகன்(ஓய்வு) ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளனர்.


