News November 2, 2025
தென்காசி: கவுன்சிலர் கணவர் கைது

பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பாவூர் மேலூர் பகுதியை சேர்ந்த விநாயகப்பெருமான் (46) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் கூலிப் 40 கிலோ, கணேஷ் புகையிலை 49 கிலோ கொண்ட 10 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைதான விநாயகப் பெருமாள் கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் ராதா என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 3, 2025
தென்காசி: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

தென்காசி மக்களே TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <
News November 3, 2025
தென்காசி: நாளை இங்கெல்லாம் மாதாந்திர மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, மற்றும் சாம்பவர் வடகரை துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.04) காலை 9 மணி – மதியம் 2 மணி வரை மின்தடை. பகுதிகள்: தென்காசி, மேலகரம், குற்றாலம், இலஞ்சி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், புளியரை, வல்லம், ஊத்துமலை, ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் சுற்றியுள்ள பல கிராமங்களில் மின்தடை. SHARE!
News November 3, 2025
தென்காசி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவன் தலங்களில் வருகிற நவம்பர் 5ம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. தென்காசி காசி விசுவநாதர் ஆலயம், குற்றாலம் குற்றாலநாதர், செங்கோட்டை குலசேகரநாதர், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநயினார் உள்ளிட்ட கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


