News November 2, 2025
பெரியகுளம் பகுதியில் வழிப்பறி.. 3 பேர் கைது!

பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்தவர் காந்தி (60). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் அப்பகுதியில் நடந்து சென்றபோது இவரை வழிமறித்த போதை ஆசாமிகள் சிலர் காந்தியை மிரட்டி அவரிடமிருந்த ரூ.2,200 மற்றும் அலைபேசியை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியகுளம் போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட ஜோதீஸ்வரன் (24), பஷீர் அஹமது (25), முகமது பைசல் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை.!

தேனி மாவட்டத்தில் நடைபெறும் மாதாந்திர மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை (நவ.4) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ராசிங்காபுரம், சிலமலை, டி.ஆர்.புரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பாரகன்மில், பொட்டிபுரம், சிலமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 3, 2025
தேனி: B.E படித்தவர்களுக்கு வேலை ரெடி!

தேனி மக்களே, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 45வயதுகுட்பட்ட B.E., B.Tech., CA., CMA., MBA..டிகிரி படித்தவர்கள் இங்கு <
News November 3, 2025
போடி: பெட்டிக்கடையில் மது விற்பனை

போடி தாலுகா போலீசார் குற்ற தடுப்பு சம்பந்தமாக நேற்று (நவ.2) மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த வீரன் (42) என்பவர் அவரது பெட்டி கடையில் மதுபாட்டில்களை பதிக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. கடையில் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் வீரன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


