News November 2, 2025

குடல் ஆரோக்கியத்தை சீராக்கும் மூலிகை

image

குடல் ஆரோக்கியம் சரியில்லாதவர்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம், வேகமான வாழ்க்கைமுறை & மனஅழுத்தம் காரணமாக குடல் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை சீராக்க உங்கள் கிச்சனில் உள்ள பொருளே போதும். இலவங்கப்பட்டையை ஓட்ஸ், காபி அல்லது தயிரில் சிறிதளவு சேர்த்து சாப்பிடுங்கள். ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி குடல் இயக்கத்தை இது சீராக்கும். SHARE.

Similar News

News November 3, 2025

BREAKING: தமிழகத்தை உலுக்கிய சம்பவம்

image

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று 3 இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள சாலையில், மாணவியின் ஆண் நண்பரை கொடூரமாக தாக்கிவிட்டு மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். இளைஞர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

News November 3, 2025

₹51 கோடி வழங்கும் BCCI!

image

உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, BCCI ₹51 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இத்துடன் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, ICC ₹39.78 கோடி பரிசுத் தொகை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. ICC வழங்கிய கடந்த உலகக் கோப்பை பரிசுத் தொகையை காட்டிலும் இது 239% அதிகமாகும்.

News November 3, 2025

FLASH: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தைகள்!

image

இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. இன்று(நவ.3) சென்செக்ஸ் 242 புள்ளிகள் சரிந்து 83,696 புள்ளிகளிலும், நிஃப்டி 45 புள்ளிகள் சரிந்து 25,677 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Maruti Suzuki, Titan Company, Axis Bank, Dr Reddys Labs உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!