News November 2, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளிட்டுள்ள அறிக்கையில், சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழுவில், காலியாக உள்ள உதவியாளர்களுடன் இணைந்த, கணினி இயக்குபவர் பணியிடம், தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. +2 தேர்ச்சி. கணினி அறிவு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் IT
Similar News
News November 3, 2025
சென்னை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 3, 2025
சென்னை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
சென்னை: தம்பியை வெட்டி சாய்த்த தி.மு.க. நிர்வாகி

தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தினகரன் (27), சரண் (24) சகோதரர்கள். இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் இருவரும் மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தினகரன் சொந்த தம்பி என்றும் பாராமல் கத்தியால் சாரணை வெட்டி சாய்த்து போலீசில் சரண் அடைந்துள்ளார். தினகரன், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.


