News November 2, 2025
விருதுநகர் அருகே கொலையா?

விருதுநகர் டி.சி.கே. பெரியசாமி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(50). திருமணம் ஆகாத இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த நிலையில் பஜார் போலீசார் அவரது உடலை கைப்பற்றினர். இவர் அடித்து கொலை செய்யப்படார? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தார என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
விருதுநகர் அரசு மருத்துவமனையில் வேலை

விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஆயுஷ் மருத்துவ ஆலோசகர் 3, ஹோமியோபதி மருத்துவர் 1, பல்நோக்கு பணியாளர்கள் 4,சிகிச்சை உதவியாளர் 4 ஆகிய பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் http://virudhunagar.nic.in முலம் பதிவிறக்கம் செய்து நவ.14 க்குள் மாவட்ட சுகாதார நல அலுவகத்தில் சமர்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஹேர் செய்யுங்கள்
News November 3, 2025
சிவகாசி மாணவர்களுக்கு போர்மேன் பயிற்சி

சிவகாசியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் போர்மேன்களுக்கு பாதுகாப்பு விதிகள் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடித்த போர்மேன்கள் மட்டுமே பட்டாசு ஆலைகளில் பணிபுரிய முடியும். இந்நிலையில் சிவகாசி அரசு கல்லுாரியில் பயிலும் மாணவர்களுக்கும் இன்று முதல் நவ.7 வரை பயிற்சி அளித்து போர்மேன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
News November 3, 2025
விருதுநகரில் கல்லால் தாக்கி கொலை

விருதுநகர் டி.சி.கே பெரியசாமி தெருவை சேர்ந்த மாரியப்பன்(50) வாறுகாலில் சடலமாக கிடந்தார். உடலை மீட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அதில், வாடியான் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன்(29) வளர்க்கும் நாயை மாரியப்பன் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பாலகிருஷ்ணன், மாரியப்பனை கல்லால் தாக்கியதில் அவர் உயிரிழந்த நிலையில் உடலை வாறுகாலில் வீசிய பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.


