News November 2, 2025

மயிலாடுதுறை: மூதாட்டியிடம் 13 சவரன் நகை பறிப்பு

image

மயிலாடுதுறை கூறைநாடு அழகப்ப செட்டி தெருவை சேர்ந்தவர் சுசீலா(75). இவர் தனது வீட்டில் அருகே உள்ள கோயிலுக்கு சென்று திரும்பும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரிடமிருந்து 13 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதுக்குறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலடுதுறை காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News November 3, 2025

மயிலாடுதுறை: போக்ஸோ வழக்கில் ஆசிரியர் கைது

image

மயிலாடுதுறை சித்தர்காட்டை சேர்ந்த சாம்சங் பிரபாகரன்(54) மயிலாடுதுறை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்த 14வயது மாற்றுத்திறனாளி மாணவி 5மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதில் இதற்கு கரணம் உடற்கல்வி ஆசிரியர் என தெரியவர போலிசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

News November 3, 2025

மணல்மேடு அருகே முதியவர் தற்கொலை

image

மணல்மேடு அருகே இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆசை தம்பி (65) இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 3, 2025

மயிலாடுதுறை ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!