News November 2, 2025
வேலூர் நகை கடையில் திருடிய வாலிபர் கைது

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நகை கடையின் மேலாளர் முகமது சச்சின். இவர் கடந்த 30-ம் தேதி கடையின் நகை விற்பனை மற்றும் இருப்புகளை சரி பார்த்தபோது 11.5 கிராம் நகை குறைவாக இருந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடையில் பணிபுரியும் திருவண்ணாமலையை சேர்ந்த ஜீவானந்தம் (23) நகை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் ஜீவானந்தத்தை நேற்று கைது செய்தனர்.
Similar News
News November 3, 2025
வேலூர்: 2,708 பணியிடங்கள்! APPLY HERE!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 3, 2025
வேலூர்: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க’
News November 3, 2025
வேலூர்: தாயுமானவர் திட்ட பொருட்கள் விநியோகம்!

2025ம் ஆண்டு நவம்பர் மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தாயுமானவர் திட்டத்தின்கீழ் பொருட்களை வழங்கும் வகையில் நாளை நவ.03 மற்றும் 4-ஆம் தேதிகளில் “தகுதியுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது” என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


