News November 2, 2025

புதுவை: பாரீசில் இருந்து பைக்கில் வந்த இளம்ஜோடி

image

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் கெவின். இவரது தாய்-தந்தையர் புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர்கள். கெவின் அவரது மனைவியான ஈம்மாவிற்கு தனது சொந்த ஊரான புதுச்சேரியை காண்பிக்க விரும்பியுள்ளார். இந்நிலையில் இருவரும் உயர்ரக இருசக்கர வாகனத்தில் 5 மாதங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, நேற்று புதுச்சேரி வந்த அவர்களை, உறவினர்கள் வரவேற்றனர்.

Similar News

News November 3, 2025

புதுச்சேரி: மாநில செயலாளர் பேட்டி

image

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், கடந்த தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு பெற்று வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், திமுக மாநில அமைப்பாளர் சிவாவும், இலவசத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று விமர்சனம் செய்த அவர். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநலவாதிகளை ஒருபோது கொச்சைப்படுத்தக் கூடாது என்றார்.

News November 2, 2025

புதுச்சேரி: ரூ.56,900 சம்பளத்தில் அரசு வேலை!

image

மத்திய அரசு சுங்கத் துறையில் காலியாக உள்ள 22 கேண்டீன் உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.11.2025 தேதிக்குள்<> இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 2, 2025

புதுச்சேரி பாண்டி மெரினாவில் வாலிபர் கொலை

image

புதுச்சேரியில் சமீப காலங்களாக கொலைவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினா விற்கு செல்லும் வழியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அறிந்த புதுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!