News November 2, 2025
நெல்லை: தந்தையை வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்

களக்காடு பகுதியில் தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 20 வயது மகளும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் காதலித்து வந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பெண்ணின் தந்தை அவரின் செல்பேனை பறித்துள்ளார். இதனால் காதலியுடன் பேசமுடியாமல் ஆத்திரமடைந்த சுரேஷ் 6 பேருடன் சேர்ந்து பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய நிலையில் 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
நெல்லை: TNHB -ன் அடுக்குமாடி சொந்த வீடு APPLY!

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்<
News November 3, 2025
நெல்லை: முன்னாள் எஸ்.ஐ மகனுக்கு கொலை மிரட்டல்!

நெல்லை டவுனை சேர்ந்த முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி, வக்பு நிலப்பிரச்சினையில் கடந்த மார்ச் மாதம் கொலை செய்யபட்டார். பிஜிலியின் மகன் இஜூர் ரகுமான் பிஜிலிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக அவரது மனைவி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தனது மகனுக்கு ஆபத்து இருப்பதாகவும், நிலம் குறித்து முறையான விசாரணை நடத்தி, முதல்வர் நியாயம் வழங்க கோரியுள்ளார். இதுக்குறித்து டவுன் போலீசார் விசாரணை.
News November 3, 2025
நெல்லை:நாளை நவ.04 மின்தடை

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் நாளை (04.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நகர்ப்புறம் உள்ள அனைத்து பகுதிகள், கல்லிடைக்குறிச்சி கோட்டம்: ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், கடையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை. வள்ளியூர் கோட்டம் பகுதிகளில் மின்தடை இருக்கும். SHARE!


