News November 2, 2025

கன்னியாகுமரியில் ரூ.21.95 கோடியில் ராஜகோபுரம்

image

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு ரூ.21.95 கோடி மதிப்பில் 9 நிலைகளுடன் கூடிய 120 அடி உயர ராஜகோபுரம் கட்டுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் இதற்கான ஆய்வு பணிகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளது. இதனால் ராஜகோபுரம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 3, 2025

அருமனை அருகே நூதன முறையில் கடத்தல்

image

புலியூர்சாலை சோதனை சாவடியில் நேற்று அருமனை போலீசார் அவ்வழியாக வந்த மினி டெம்போவை சோதனை செய்தனர். அதில் மேல் பகுதியில் மரத்தூள் மூடைகள் அடுக்கப்பட்டு இருந்தன. போலீசார் அதன் கீழ் இருந்த மூடைகளை சோதனை செய்ய முயன்ற போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர், உடன் இருந்தோர் தப்பி சென்றனர். அதில் சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறையினரிடம் அரிசி, வாகனம் ஒப்படைக்கப்பட்டது.

News November 3, 2025

குமரியில் ஊராட்சி செயலாளர் வேலை அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களில் காலியாக உள்ள 30 பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இதில் கல்வி தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாக நவ.9 அன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்வமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News November 3, 2025

கன்னியாகுமரியில் ஒருவர் அடித்துக் கொலை

image

பேயன் குழியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மனைவியிடம் ராஜன் என்பவர் அத்து மீற முயன்றுள்ளார். இதுகுறித்து கேள்விப்பட்ட கோபாலகிருஷ்ணன் ராஜனிடம் கேட்ட போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபாலகிருஷ்ணன் கம்பால் ராஜனை தாக்கியதில் ராஜன் உயிரிழந்தார். இது குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் இரணியல் போலீசில் நேற்று சரணடைந்தார்.

error: Content is protected !!