News November 2, 2025
புதிய சாதனை படைத்த ஓமந்தூரார் மருத்துவமனை!

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய சி.டி ஸ்கேன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், ரூ.500-ல், 2 நிமிடத்தில் இதய அடைப்புகளை தெரிந்துகொள்ள CT Calcium Scoring என்ற புதிய பரிசோதனை மூலம், ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கிறதா என கண்டறிந்து, எந்த அளவிற்கு கொழுப்பு படிந்துள்ளது என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
Similar News
News November 3, 2025
சென்னை: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 3, 2025
சென்னை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
சென்னை: தம்பியை வெட்டி சாய்த்த தி.மு.க. நிர்வாகி

தி.நகர் மாம்பலம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தினகரன் (27), சரண் (24) சகோதரர்கள். இவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று வழக்கம்போல் இருவரும் மது அருந்திய போது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தினகரன் சொந்த தம்பி என்றும் பாராமல் கத்தியால் சாரணை வெட்டி சாய்த்து போலீசில் சரண் அடைந்துள்ளார். தினகரன், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.


