News November 2, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (01.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 3, 2025

கிருஷ்ணகிரி: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 3, 2025

கிருஷ்ணகிரி: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

image

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

News November 3, 2025

கிருஷ்ணகிரி: மினி வேன் கவிழ்ந்து விபத்து!

image

ஓசூர் நெடுஞ்சாலை துறையில் வட்டாட்சியராக உள்ளவர் தேன்மொழி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று (நவ.2) அஞ்செட்டி அடுத்த உரிகத்தில் கோவில் திருவிழாவுக்கு சென்று ஓசூர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற டெம்போ டிராவலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 17 பேரும் ஓசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!