News November 2, 2025
திருவள்ளூர் இரவு ரோந்து காவலர்களின் விபரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் நேற்று (1.11.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளாம்.
Similar News
News November 3, 2025
திருவள்ளூர்: வெளிநாடு செல்ல ஆசையாய் இருந்தவருக்கு விபூதி

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் சேரலாதன் (29). இவர், ஆவடி அடுத்த சேக்காடு பகுதியில் ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த ஆகாஷ் (26) என்பவர் துபாய் செல்வதற்காக விசா வாங்கி தருமாறு கேட்டார். இதற்காக சேரலாதனிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கொடுத்துள்ளார். இந்நிலையில், போலியான வீசா தந்ததால் சேரலாதன் கைது செய்யப்பட்டார்.
News November 3, 2025
திருவள்ளூர்: 15அடி உயரத்தில் இருந்து விழுந்து பெயின்டர் பலி

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 50. கட்டட தொழிலாளி. இவர் நேற்று மாலை, பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் பகுதியில், உள்ள வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடத்தின், பக்கவாட்டு பகுதிகளில் பெயின்ட் அடிப்பதற்காக கயிற்றில் நின்று வேலை பார்த்தபோது, 15அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News November 3, 2025
திருவள்ளூர்: 10 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது

பூந்தமல்லி பகுதியில் நேற்று (02.11.2025) நடைபெற்ற சிறப்பு ரோந்து நடவடிக்கையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சாவை கடத்தி வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கணநாத் மாலிக் என்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு ஒப்படைத்துள்ளனர். “போதை இல்லா தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.


