News April 18, 2024
தேனி: இதுவரை 1.6 கோடி பறிமுதல்

தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படையினர் மற்றும் நிலையான சோதனை சாவடிகள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், மார்ச் 18 முதல் இன்று வரை ரூ.1,59,60,515 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சரியான ஆவணங்கள் சமர்ப்பித்ததின் பேரில் ரூ.1,52,08,330 திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் ரூ. 7,52,185 கருவூலங்களில் பாதுகாக்கப்பட்டு வருகிறது என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News November 18, 2025
தேனி: 3 கிலோ கஞ்சா கடத்திய சிறுவன்

ஆண்டிபட்டி போலீசார் நேற்று (நவ.17) ஆண்டிபட்டி செக் போஸ்ட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படி வந்த முத்துமணி (27), வீரமணி (21), ராஜேஷ் (34), ஹரிஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அவர்களிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

தேனி: 10th மாணவி கர்ப்பம் இருவர் போக்சோவில் கைது

ஆண்டிபட்டி ஒன்றியத்தை சேர்ந்த சிறுமி அப்பகுதி பள்ளியில் 10th படித்தார். உடன் பிளஸ் 1 படிக்கும் மாணவருடன் பழகி நெருக்கமுடன் இருந்த நிலையில் அதனை பிச்சைமணி (52) என்பவர் புகைப்படம் எடுத்து அதை சிறுமியிடம் காட்டி சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மாணவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானார். ஆண்டிபட்டி மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்