News November 1, 2025
நீலகிரியில் விவசாயிகள் கூட்டம் அறிவிப்பு

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறித்தக் கூட்டம் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை 7ம் தேதி வரை தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி 72, ஊட்டி 643001 முகவரிக்கு நேரில், தபால் அல்லது
மின்னஞ்சலில் அனுப்பலாம்.
Similar News
News November 3, 2025
நீலகிரி: லஞ்சம் கேட்டாங்களா? உடனே பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை dspnlgdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 0423-2443962 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News November 3, 2025
நீலகிரியை சேர்ந்த வாலிபர் பலி!

நீலகிரி மாவட்டம் குன்னூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் அக்பர்அலி (25). பூ வியாபாரி. இவர், குன்னூர் குமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்த ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் நேற்று கோவை வந்தார். பின்னர், கெம்மநாயக்கன்பாளையம்- காரமடை ரோடு பூவரச மேடு அருகே குன்னூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிரே வந்த கழி வுநீர் அகற்றும் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த அக்பர்அலி உயிரிழந்தார்.
News November 3, 2025
நீலகிரி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, வன விலங்குகள் நடமாட்டம், விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க வனத்துறை சார்பில் 1800-425-4343 என்ற உதவி எண் பயன்பாட்டில் உள்ளது. பொதுமக்கள் வனவிலங்கு தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவிக்கலாம். SHARE பண்ணுங்க!


