News April 18, 2024
சேலம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

சேலம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Similar News
News August 19, 2025
சேலத்தில் அங்கீகரிக்கப்படாத 3 கட்சிகள் ஆஜராக உத்தரவு

இந்திய தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்திந்திய தொழிலாளர் கட்சி, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி, மற்றும் திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
News August 19, 2025
சேலத்தில் இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

சேலம் மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News August 19, 2025
295 ஓட்டுநர்களின் லைசென்ஸ் ரத்து!

சேலம் சரகத்தில் வாகன விபத்துக்களைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம், தருமபுரியில் கடந்த 7 மாதத்தில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பை ஏற்படுத்திய 295 பேரின் லைசென்ஸ் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.