News April 18, 2024
விழுப்புரம் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
Similar News
News July 6, 2025
விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஜுலை 5 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
News July 5, 2025
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் ஒன்றியம், தைலாபுரத்தில் இன்று (ஜூலை 5) பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜூலை 8, 2025 செவ்வாய்க்கிழமை அன்று பா.ம.க. செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
News July 5, 2025
திண்டிவனம் அரசு மருத்துவமனை சாதனை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற சென்ற சிறுமி கோமதி (17) அவருக்கு கையின் எலும்பு வளர்ச்சி குன்றி இருந்தது. அதனை அறுவை சிகிச்சை செய்து 140 நாட்களில் 14 செ.மீ வளர செய்து திண்டிவனம் அரசு மருத்துவர்கள் சுரேஷ் மற்றும் மருத்துவ குழுவினர்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.