News November 1, 2025

புதுவை: ரூ.2.44 கோடி மோசடி – ஒருவர் கைது

image

புதுச்சேரி, வெங்கட்டா நகரை சேர்ந்தவர் சீனிவாசன். தொழிலதிபரான இவர், கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவைகளை வாங்கி, கம்பெனிக்கு விற்பனை செய்து வருகிறார். இவரிடம் மக்காச்சோளம் வாங்கித் தருவதாக ரூ.2.44 கோடி மோசடி செய்த ப்ரோக்கர் செல்வம் என்பவ்ரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இதற்கு காரணமாக இருந்த புதுவைச் சேர்ந்த தம்பதியை தேடி வருகின்றனர்.

Similar News

News November 1, 2025

புதுச்சேரி: நூல் வெளியீட்டு விழா

image

புதுச்சேரி, ஓய்வு பெற்ற தமிழ் விரிவுரையாளர் லோகநாதன் எழுதிய நுால்களான நாட்டுபுற மக்களின் நம்பிக்கைகளும், சடங்குகளும்’ என்ற ஆய்வு நுால் மற்றும் ‘குல்லா போட்ட கத்திரிக்காய்’ என்ற குழந்தை பாடல்கள் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, புதுச்சேரி சட்டப்பேரவையில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி நூல்களை வெளியிட்டார். அதனை சபாநாயகர் செல்வம் பெற்றுக்கொண்டார்.

News November 1, 2025

புதுவை: மது போதையில் ரகளை செய்த இளைஞர் கைது

image

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பொது மக்களிடம் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று
ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் லாஸ்பேட்டை சதீஷ் குமார்( 27), என்பது தெரிய வந்தது. பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News November 1, 2025

புதுவை: மருத்துவ படிப்பில் கூடுதலாக இடங்கள்

image

புதுவை கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படிக்க 56 இடங்கள் உள்ளன. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி அதனை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிடம் புதுவை அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி இந்த ஆண்டு கூடுதலாக 16 இடங்களை நிரப்ப மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியது. இதனால் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை இடங்கள் 72 ஆக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!