News November 1, 2025

அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

image

கோத்தகிரி பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகள் தொல்லை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தாந்தநாடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் 4 வீடுகளின் கதவை உடைத்து கரடி அட்டகாசம் செய்தது. இதையடுத்து பகல் நேரத்திலேயே இந்த கிராம குடியிருப்பு பகுதியில் கரடி உலா வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 2, 2025

நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று (01.11.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள், நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News November 1, 2025

நீலகிரியில் விவசாயிகள் கூட்டம் அறிவிப்பு

image

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறித்தக் கூட்டம் 21ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை 7ம் தேதி வரை தோட்டக்கலை இணை இயக்குனர், தபால் பெட்டி 72, ஊட்டி 643001 முகவரிக்கு நேரில், தபால் அல்லது
மின்னஞ்சலில் அனுப்பலாம்.

News November 1, 2025

நீலகிரி : PHONE தொலைந்து விட்டால் இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <>கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!