News November 1, 2025

தஞ்சை: போக்சோ வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கூகூரை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கடந்த 2023-ம் ஆண்டு பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற 17 சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் நாச்சியார்கோவில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5000 அபராதமும் விதித்து தஞ்சை போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News November 2, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (நவ.01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

தஞ்சை: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News November 1, 2025

தஞ்சாவூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

தஞ்சாவூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!