News November 1, 2025
திருப்பத்தூர்: ரயில் பயணிகளை குறிவைத்து திருடும் கும்பல்

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையிடம் சில நாட்களுக்கு முன்பு ரயில் படியில் பயணம் செய்த வாலிபரை குச்சியால் அடித்து செல்போன் திருடியது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நேற்று (அக்-31) ஆம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை செய்ததில், கந்திகொள்ளை பகுதியை சேர்ந்த பரமேஷ் (20) எனும் வாலிபர் திருடியது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.
Similar News
News November 2, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் (நவ .01) இரவு 9 மணி முதல் இன்று (நவ.2) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக் கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்
News November 1, 2025
திருப்பத்தூர்: அலுவலர்கள் தாமதத்தால் மக்கள் பரபரப்பு

திருப்பத்தூர், கந்திலி ஒன்றியம் கிழக்குபதனவாடி ஊராட்சியில் இன்று (நவ.01) காலை 11 மணியளவில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெயற்றது. இக்கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி துறை, வேளாண் துறை, மின்சாரத்துறை, காவல்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை சுகாதாரத்துறை சேர்ந்த அலுவலர்கள் யாரும் வராததால் பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
News November 1, 2025
திருப்பத்தூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <


