News November 1, 2025
நெல்லையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.
Similar News
News November 2, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [நவ.1] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News November 1, 2025
ஆற்றில் எச்சரிக்கையுடன் இறங்குங்கள் – மாவட்ட நிர்வாகம்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று (நவ.1) காலை தண்ணீர் திறக்கப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் தாமிரபரணி ஆற்றில் இறங்கவும் நீராடவும் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் டாக்டர் இரா.சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
News November 1, 2025
ரூ.3.59 கோடி மதிப்பில் சாகச சுற்றுலா தளம்

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணை பகுதியில் சுற்றுலாத்துறை சார்பில் ரூ.3 கோடி 59 லட்சம் மதிப்பிலான சாகச சுற்றுலாத்தலம் மேம்பாடு செய்யப்படுகிறது. இதனை சபாநாயகர் அப்பாவு இன்று அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். இங்கு சாகச சுற்றுலா வசதிகள், பல்லுயிர் பூங்கா மற்றும் இதர வசதிகள் அமைக்கப்படும் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.


