News April 18, 2024
சட்ட விரோதமாக கோவையில் தங்கியுள்ள நபர்கள்

கோவை வடக்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி அமைப்பாளராக இருக்கும் பழனிச்சாமி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் இன்று புகார் மனு அளித்தார். அதில், அவிநாசி சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை அருகே பாஜக தேர்தல் அலுவலகத்தில், வெளியூர் ஆட்கள் சட்ட விரோதமாக தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலைபேசி மற்றும் தொலைபேசி வாயிலாக, வாக்காளர்களை தொடர்பு கொண்டு அண்ணாமலைக்கு வாக்களிக்க பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார்.
Similar News
News November 24, 2025
கோவை: B.Sc, B.E, B.Tech, B.Com, BBA படித்தவரா நீங்கள்?

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA., 3. கடைசி தேதி : 14.12.2025, 4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5. வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26, 6. முழுதகவலுக்கு: <
News November 24, 2025
கோவை: Whats App இருக்கா? சூப்பர் தகவல்

கோவை மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!
News November 24, 2025
கிணத்துக்கடவு: தக்காளி விலை கிடுகிடு உயர்வு

கோவை, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அவ்வகையில் நேற்று 10 டன் தக்காளி விற்பனைக்கு வந்துள்ளது. பின், நடைபெற்ற ஏலத்தில் 14 கிலோ எடை கொண்ட 1 பெட்டி தக்காளி ரூ.500 முதல் ரூ.900 வரை விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ ரூ.80-க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


