News November 1, 2025
தனிக்கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?

சமீப காலமாக அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், சில நேரங்களில் தலைவர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மனசாட்சிக்கு எதிராக பேச வேண்டியுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார். தான் தனது குடும்பத்தின் முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால், தனிக்கட்சி தொடங்குவது சாத்தியமில்லை என்று அவர் தெரிவித்தார். அதேநேரம், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அண்ணாமலை சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
Similar News
News November 2, 2025
மாவோயிஸ்ட் பயங்கரவாதம்: மோடி சூளுரை

11 ஆண்டுகளுக்கு முன்பு 125 ஆக இருந்த மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை, தற்போது 3 ஆக குறைந்துள்ளது என PM மோடி தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து இந்தியா விடுபடும் நாள் வெகுதொலைவில் இல்லை என சூளுரைத்தார். இந்த வன்முறை மிகுந்த விளையாட்டில், பழங்குடி மக்கள் தங்களை தாங்களே அழித்துக் கொள்ள மோடியால் அனுமதிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
News November 2, 2025
மாரி செல்வராஜுக்கு எதிராக பொங்கிய ஆராத்யா

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.
News November 2, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 2, ஐப்பசி 16 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3:15 PM – 4:15 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: துவாதசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை


