News November 1, 2025

மதுரை: உயர்நீதிமன்ற கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

image

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக செப்., 26 ல் தகவல் வந்து அது புரளி என உறுதியானது. நேற்று மீண்டும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு கண்டெடுக்கப்படவில்லை. புரளி என உறுதியானது. வழக்கம் போல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடந்தன.

Similar News

News November 1, 2025

மதுரை: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

image

மதுரை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News November 1, 2025

மதுரை: இலவச தையல் இயந்திரம் APPLY லிங்க்!

image

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News November 1, 2025

மதுரையில் tattoo போட பயிற்சி

image

மதுரை, தாட்கோ மூலம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தற்போது ஒப்பனை, அழகுக்கலை பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவை சார்ந்த 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

error: Content is protected !!