News November 1, 2025
விருதுநகர்: இளைஞர்களுக்கு அழகுக்கலை பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை, அழகுக்கலை, பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களை தேர்வு செய்து ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வருவாய் ஈட்ட வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News November 1, 2025
விருதுநகர்: கோயிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்..

விருதுநகர் மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் எழுத படிக்க தெரிந்த 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ. 25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு <
News November 1, 2025
விருதுநகர்: கொலை வழக்கில் இருவர் கைது

சென்னிலைகுடி கிராமத்தில் கடந்த அக்.30ல் கூலித் தொழிலாளி அசோக்ராஜ் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரின் விசாரணையில் அசோக்ராஜ் உறவினர்கள் (அண்ணன் முறை) சங்கர் (57) மற்றும் சுந்தரமூர்த்தி (43) ஆகிய இருவரும் சேர்ந்து இடப்பிரச்சினை காரணமாக மதுபோதையில் இருந்த அசோக்ராஜை தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. திருச்சுழி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
News November 1, 2025
விருதுநகர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

விருதுநகர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க


