News November 1, 2025
அற்ப அரசியல் லாபத்திற்காக பேசும் PM மோடி: சீமான்

தமிழகத்தில் பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்ற PM மோடியின் பேச்சு, தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு என்று சீமான் விமர்சித்துள்ளார். திமுகவினர் பிஹார் மக்களை துன்புறுத்துவதாக மோடி கூறியதற்கு, திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அற்ப அரசியல் லாபத்திற்காக தமிழர்கள் மீது வரலாற்று பெரும் பழியை மோடி சுமத்தியுள்ளதாக சீமான் சாடியுள்ளார்.
Similar News
News November 2, 2025
பழைய கூகுள் குரோம் யூஸ் பண்றீங்களா? WARNING

கூகுள் குரோம் பழைய வெர்ஷன் பிரவுசர் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல என்று மத்திய அரசின் CERT-In எச்சரித்துள்ளது. பழைய வெர்ஷனில் தீவிர பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதால், பயனர்களின் தகவல் திருடுபோக வாய்ப்புள்ளது. ஆகவே 142.0.7444.59/60 வெர்ஷனைவிட பழைய வெர்ஷன் பயன்படுத்தும் Linux, Windows, மற்றும் mac OS-கள் பயன்படுத்துவோர், உடனே அப்டேட் செய்துகொள்ளவும்.
News November 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News November 2, 2025
IAS, IPS அதிகாரிகளின் மாநாடு ஒத்திவைப்பு

சென்னையில் வரும் 5 மற்றும் 6-ம் தேதிகளில் நடைபெற இருந்த IAS, IPS அதிகாரிகளின் மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாநாடு நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலவரம், திட்ட செயல்பாடுகள் குறித்து CM தலைமையில் மாநாடு நடைபெற இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய மாநாடு நடைபெறுவது வழக்கம்.


