News November 1, 2025
சாதி அவமானகரமானது: மாரி செல்வராஜ்

சாதி என்பது பெருமை அல்ல, அது அவமானகரமானது என்று மாரி செல்வராஜ் கூறியுள்ளார். ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற அதே நேரத்தில், மாரியின் படங்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய மோதலை உருவாக்கும் வண்ணம் உள்ளதாக சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது பற்றி பேசியுள்ள அவர், போஸ்டர் ஒட்டி சாதிப் பெருமை பேசலாம், ஆனால் நான் சாதிக்கு எதிராக பேசக் கூடாதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News November 2, 2025
ராசி பலன்கள் (02.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 2, 2025
திராணி இருந்தால் EPS-ஐ கைது செய்யுங்கள்: EX அமைச்சர்

கொடநாடு கொலையில் EPS குற்றவாளி என்றால் போலீஸ் என்ன செய்கிறது என திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக ஆட்சிதானே நடக்கிறது, EPS-ஐ ஜெயிலில் போட வேண்டியதுதானே எனவும், திராணி இருந்தால் கைது செய்து பாருங்கள் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். மேலும், EPS CM-ஆவது தெய்வத்தின் தீர்ப்பு எனவும், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் CM கனவில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் நாளை(நவ.2) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நாளை முதல் நவ.7-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!


