News November 1, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 1, ஐப்பசி 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை
Similar News
News November 1, 2025
கரூரில் விஜய் பேசிய இடத்தை 2-வது நாளாக அளக்கும் CBI

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக CBI அதிகாரிகளின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளி விடுமுறைக்கு பின் நேற்றிலிருந்து மீண்டும் அவர்கள் விசாரணையை தொடங்கினர். கூட்டம் நடைபெற்ற சாலையின் பரப்பு, அமைப்பு ஆகியவற்றை நேற்று நவீன கருவிகளுடன் ஆய்வு செய்தனர். இந்நிலையில், இன்றும் 2-வது நாளாக வேலுச்சாமிபுரத்தில் கூட்டம் நடைபெற்ற சாலையை அளவிட்டு ஆய்வு செய்தனர்.
News November 1, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹80 உயர்வு!

மாதத்தின் முதல் நாளான இன்று(நவ.1) தங்கம் உயர்வுடன் தனது வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம், கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹11,310-க்கும், சவரன் ₹90,480-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹166-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,66,000-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலையில் நேற்று மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது: EPS

கட்சியில் இருந்த துரோகிகள் போய்விட்டனர்; தற்போதுதான் நிம்மதி ஏற்பட்டுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கட்சிக்குள் நெருஞ்சில் முள்ளாக இருந்த சிலரை எப்படி அகற்றுவது என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், அவர்களாகவே தவறு செய்துவிட்டு, தங்களை துரோகிகள் பக்கம் இணைத்து கொண்டு வெளியேறி விட்டனர். இனி அவர்கள் அனைவரும் நம்முடைய எதிரிகள்தான் என்று செங்கோட்டையனை மறைமுகமாக குறிப்பிட்டார்.


