News November 1, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் அக்.31 இரவு முதல் நவ.1 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (நவ.1) இரவு 10.00 மணி முதல் இன்று (நவ.2) காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 1, 2025
விழுப்புரம்: தறிகெட்டு ஓடிய பைக்; இருவர் கைது!

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் காவலர்கள் நேற்று அக்.31 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாச்சனூர் பகுதியை சேர்ந்த ராமு கானையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் தங்கள் பைக்கில் மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
News November 1, 2025
விழுப்புரம்: குட்கா விற்ற இருவர் கைது

திண்டிவனம் நேற்று அக்.31 மாலை, ரோஷணை பாட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செந்தில்ராஜ், என்பவரின் பங்க் கடையில் சோதனை நடத்தினர். அவரது கடையில் 500க்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட அவரிடம் விசாரித்த போது, திண்டிவனத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, என்பவரிடமிருந்து குட்கா வாங்கியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.


