News November 1, 2025

கூடலூரில் 340 கிலோ புகையிலை பறிமுதல்

image

கூடலூரில் காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையில், தமிழக கேரள எல்லையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்த போது, சந்தேகத்தின் பேரில் அவ்வழியே காரில் வந்த வாகனத்தை சோதனை செய்த போது, வட மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோனா ராம், பிஜலா ஆகிய இரு இளைஞர்கள் 340 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வர காவல் ஆய்வாளர் தலைமையில் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News November 1, 2025

தேனி: அஜாக்கிரதையால் நேர்ந்த விபரீதம்

image

குள்ளபுரம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேந்தன். இவர் நேற்று முன்தினம் அவரது பைக்கில் அப்பகுதியில் உள்ள சாலையில் சென்றுள்ளார். அப்பொழுது அப்பகுதியில் விபத்து ஏற்படுத்தும் விதமாக அஜாக்கிரதையாக நிறுத்தப்பட்டு இருந்த பால் வண்டி மீது வெற்றிவேந்தன் சென்ற பைக் மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்கு (அக்.31) பதிவு.

News November 1, 2025

தேனி: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

image

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் www.rrbapply.gov.in இந்த தளத்தில் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். ரயில்வேயில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு. எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News November 1, 2025

தேனி: டிப்பர் லாரி மோதி கோர விபத்து ஒருவர் படுகாயம்

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (55). இவர் நேற்று (அக்.31) அப்பகுதியில் உள்ள டீக்கடையின் முன்பாக ஓரமாக நின்று இருந்து உள்ளார். அப்பொழுது அவர் வழியாக ராஜேந்திரன் என்பவர் ஒட்டி டிப்பர் லாரி ராஜாராம் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விபத்து குறித்த ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!