News November 1, 2025
மதுரை: பைக்கில் சென்றவர் தடுமாறி விழுந்து பலி.!

மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் காவேரி மணி (22). இவர் திருச்சி – தூத்துக்குடி சாலையில் இன்று பைக் ஓட்டி செல்லும் போது வேகத் தடையில் ஏறும்போது தவறி கீழே விழுந்தார். இதில் பலமாக அடிபட்டவர் மதுரை அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 1, 2025
மதுரை: மன விரக்தியில் கூலித்தொழிலாளி எடுத்த முடிவு

மதுரை கள்ளிக்குடி அருகேயுள்ள தூம்பகுளம் ராமர். இவரது மகன் பாண்டீஸ்வரன் (37) பிளம்பராக பணி புரிந்து வந்துள்ளார். இதற்கிடையே அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத்தின் வரவு செலவு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டீஸ்வரன் மன விரக்தியில் இருந்து வந்துள்ளார், இந்நிலையில் நேற்று மதியம் தூம்பகுளம் கோயில் அருகே மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 1, 2025
மதுரை: ரயில்வேயில் 2,569 காலியிடங்கள்! உடனே APPLY

இந்தியன் ரயில்வேயில் ஜூனியர் எஞ்சினியர், உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு 2,569 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிப்ளமோ, டிகிரி (B.Sc.,) படித்தவர்கள் 30.11.2025-க்குள் <
News November 1, 2025
மதுரை: கார் கவிழ்ந்து கோர விபத்து; இளைஞர் பரிதாப பலி.!

உசிலம்பட்டி அருகே எலுவம்பட்டியைச் சேர்ந்தவர் அபினேஷ் (26). அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினருடன், பசும்பொன்னிற்கு காரில் சென்றார். இதில் பார்த்திபன் என்பவர் ஓட்டிய காரில் அபினேஷ் உள்ளிட்ட 7 பேர் சென்றனர். செல்லம்பட்டி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மீது மோதி கார் கவிழ்ந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கி அபினேஷ் பலியானார். மற்றவர்கள் லேசான காயமடைய செக்கானூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.


