News October 31, 2025
வறுமையை ஒழித்த மாநிலமாகும் கேரளா

தீவிர வறுமையை (Extreme Poverty) மாநிலத்தில் இருந்து ஒழித்துவிட்டதாக கேரள அரசு, நாளை (நவ.1)அறிவிக்க உள்ளது. உலக வங்கியின் வரையறைப்படி, ஒருவரின் தினசரி வருமானம் ₹168-க்கு குறைவாக இருந்தால், அவர் தீவிர வறுமையில் இருப்பதாக கொள்ளப்படும். இந்நிலையில் உணவு, உறைவிடம், உடைகள், சுகாதார வசதி, குறைந்தபட்ச வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிர வறுமையை அடையாளம் கண்டு ஒழித்ததாக கேரளா கூறுகிறது.
Similar News
News November 1, 2025
மகளின் நினைவாக இளையராஜா புதிய அறிவிப்பு

மறைந்த தனது மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா தொடங்கியுள்ளார். இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெண்கள், இதில் பதிவு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக, 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஆர்கெஸ்ட்ரா தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். கேன்சர் காரணமாக பவதாரிணி கடந்தாண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
இந்த மாதம் 7 நாள்கள் விடுமுறை… ரெடியா இருங்க!

நவம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை மட்டுமே. 5 ஞாயிற்றுக் கிழமைகளிலும் (நவ.2, 9, 16, 23, 30) வங்கிகள் இயங்காது. அதேபோல், 2-வது, 4-வது சனிக்கிழமைகளிலும் (நவ.8, 22) விடுமுறையாகும். மற்ற 23 நாள்களிலும் தமிழகத்தில் வங்கிகள் முழுநேரமும் செயல்படும். இதற்கேற்ப, கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை பிளான் பண்ணிக்கோங்க மக்களே! SHARE IT.
News November 1, 2025
பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியேறியது இவர்தான்

பிக்பாஸ் 9-வது சீசன் தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பிரவீன் காந்தி, அப்சரா சிஜே, ஆதிரை எலிமினேட் ஆகியுள்ளனர். இந்த வார எலிமினேட் பட்டியலில் கானா வினோத், கம்ருதீன், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி, கலையரசன் ஆகியோர் இருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகள் பெற்று கலையரசன் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


