News October 31, 2025

கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பெண்களின் சடலம் எண்ணூரில் மீட்பு

image

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சார்ந்த தேவகி(30), தேர் வழியை சேர்ந்த காயத்ரி(18), தேவம்பேட்டை சேர்ந்த பவானி (19), எளாவூரை சேர்ந்த ஷாலினி(18) இன்று மின்சார ரயில் சென்னைக்கு சென்றனர். இந்நிலையில் 4 பேரின் சடலம் சென்னை எண்ணூர் கடற்கரை ஓரத்தில் மீட்கப்பட்டுள்ளது. 4 பேரும் எதனால் இறந்தார் என இதுவரை தெரியாத நிலையில் இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 1, 2025

திருவள்ளூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<> இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.

News November 1, 2025

திருவள்ளூர்: 3 மாதத்தில் பிரச்னைகள் தீர்க்கும் கோயில்

image

திருவள்ளூர் மாவட்டம் , திருப்பாசூர் கிராமத்தில் அமைந்துள்ளது வாசீஸ்வர சுவாமி கோயில். இது, அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோரால் பாடப்பட்ட சிறப்பினைக் கொண்ட கோயில். 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் இரண்டாம் கரிகால சோழனால் கட்டப்பட்டது. 11 விநாயகர்கள் எழுந்தருளியிருக்கும், விநாயகர் சபை ஒன்றும் உள்ளது. விநாயகரை வழிபட்டால் அனைத்து பிரச்னைகளும் மூன்று மாதத்தில் தீரும் என்பது ஐதீகம்.

News November 1, 2025

திருவள்ளூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

திருவள்ளூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!