News April 18, 2024
நாளை மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிப்பு

சென்னையில் நாளை காலை முதல் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது . மக்களவை தேர்தலையொட்டி நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய இந்த பயணம் ஏதுவாக இருக்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 16, 2025
சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (ஆகஸ்ட்.15) இரவு 11 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
News August 15, 2025
சென்னையில் இங்கு தண்ணீர் வராது! ALERT

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஆகஸ்ட்.18ம் தேதி 5 மண்டலங்களில் ஒருநாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் ஆக.18ம் தேதி காலை 8 மணி முதல் ஆக.19ம் தேதி காலை 8 மணி வரை தண்ணீர் வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மக்களே தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க)
News August 15, 2025
ரிப்பன் மாளிகையில் கொடியேற்றிய மேயர்

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் பிரியா இன்று தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.