News October 31, 2025

சேலம்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

image

சேலம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.

Similar News

News November 1, 2025

சேலம் வழியாக கோயம்புத்தூர் – மதார் சிறப்பு ரயில்!

image

கோயம்புத்தூர் ராஜஸ்தானின் மதார் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் தொடங்குகிறது. ரயில் எண் 06181 கோயம்புத்தூரில் இருந்து வியாழக்கிழமைகளில் புறப்பட்டு, சேலத்தில் காலை 5.10 மணிக்கு வந்து 5.15 மணிக்கு புறப்படும்.
திரும்பும் ரயில் 06182 மதாரில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்பட்டு, சேலத்தில் புதன்கிழமை காலை 3.50 மணிக்கு வந்து 3.53 மணிக்கு புறப்படும்.
பயணிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 1, 2025

சேலம்: கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

image

1. 12வது முடித்தவர்களுக்கு கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை – https://nabfins.org/ 2. இந்தியன் ரயில்வேயில் 2569 வேலை- https://www.rrbapply.gov.in/ 3.10வது போதும் தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சி செயலாளர் வேலை – https://www.tnrd.tn.gov.in/ 4.மத்திய அரசு பெல் நிறுவனத்தில் வேலை – https://bel-india.in/ 5. ONGC நிறுவனத்தில் 2623 அப்ரண்டிஸ் வேலை – https://ongcapprentices.ongc.co.in/. (ஷேர் பண்ணுங்க)

News November 1, 2025

சங்ககிரி: 16½ பவுன் நகை, பணம் திருட்டு!

image

சங்ககிரி அருகே தேவண்ணகவுண்டனூர் கிராமம் சுண்டகாயன்காடு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மல்லிகா (52), நேற்று மாலையில் வீட்டிற்கு திரும்பிய போது, வீடு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் உள்ள 16 பவுன் நகை மற்றும் ரூ.50,000 திருடப்பட்டு போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பில் சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!