News October 31, 2025
ஜெமிமா எனும் ஸ்டார்.. அன்றே கணித்த பிரபலம்

ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பாக இங்கிலாந்து EX வீரர் நாசர் ஹூசைன் பதிவிட்ட ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்த போது ஜெமிமாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட நாசர் ஹூசைன், அவருக்கு சில பந்துகளை வீசியதாக கூறியுள்ளார். அவர் எதிர்காலத்தில் இந்திய அணியின் ஸ்டாராக உருவெடுப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சொன்னது போலவே தற்போது நடந்துள்ளது.
Similar News
News November 1, 2025
எந்த உணவை எத்தனை நாள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்?

உணவுகளை எத்தனை நாள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம் என்பதற்கான கால அளவை FDA பரிந்துரைத்துள்ளது. அந்த கால அளவை மீறினால் உணவு நஞ்சாகி வயிற்றுப் போக்கு, வாந்தி போன்ற பிரச்னை ஏற்படலாம். மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கம் Swipe செய்து முழு விவரத்தை தெரிஞ்சிக்கோங்க. நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. முடிந்த வரையில் ஃப்ரிட்ஜில் உணவுகள் வைப்பதை தவிருங்கள். ஆரோக்கியம் காக்க ஃப்ரெஷ்ஷாக சாப்பிடுங்கள்.
News November 1, 2025
BREAKING: செங்கோட்டையன் வெளியிடும் ஆடியோ

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் முக்கிய ஆடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு புறநகர் அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சரியாக 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
News November 1, 2025
ருக்மணி வசந்த் இவருக்கு ஜோடியா?

பொதுவாக நடிகர் – நடிகைகள் ஜோடி போடும்போது, நடிகர்களுக்கு தான் வயது அதிகமாக இருக்கும். ஆனால் தன்னை விட குறைந்த வயது நடிகருடன் ஜோடி சேர உள்ளார் ‘நேஷனல் கிரஷ்’ ருக்மணி வசந்த். லிங்குசாமி இயக்கத்தில், இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்ஷவர்தனை விட 3 வயது மூத்தவர் ருக்மணி வசந்த்.


