News October 31, 2025
சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதல்

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 36% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பாக 171.5 மிமீ மழை பொழியும் நிலையில், இன்று வரை 233.5 மிமீ மழை பதிவாகியுள்ளது. மேலும் சென்னையில் வடகிழக்கு பருவமழை 29% கூடுதலாக பெய்துள்ளது, 354.7 மிமீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News November 1, 2025
சென்னை மெட்ரோவில் சூப்பர் வேலை; ரூ.30,000 சம்பளம்!

சென்னை மெட்ரோவில் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். இதற்கு டிப்ளமோ, BE படித்த 18-33 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். மாதம் ரூ.27,000- 30,000 சம்பளம் வழங்கப்படும். சென்னையில்<
News November 1, 2025
சென்னை உயர் நீதிமன்றம் கேடு விதித்து உத்தரவு

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் 1400 குடியிருப்புகள் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதித்தது சட்டவிரோதம் என மனு தாக்கல் செய்யப்பட்டது. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த கட்டுமான பணிகளுக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்றும் நவம்பர் 12ம் தேதிக்குள் பதில் அளிக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News November 1, 2025
சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் இன்று (நவ.1) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மோன்தா புயல் காரணமாக கடந்த 28-ம் தேதி சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடு செய்ய இன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.


