News October 31, 2025
ORSL விற்பனைக்கு தமிழக அரசு தடை

ORSL, ORSL PLUS, ORS FIT ஆகிய கரைசலை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இவற்றை குடித்தால் நோயின் தன்மை மேலும் தீவிரமாகும் என FSSAI தடை விதித்திருந்த நிலையில், அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. உலக பொது சுகாதார அமைப்பு பெயர் அச்சிடப்பட்ட ORS-ஐ மட்டுமே விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ORSL கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 1, 2025
பெண்களே 30 வயது ஆச்சா? இத கண்டிப்பா செய்யணும்!

வேலைக்கு செல்லும் பெண்கள், குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. அதிலும் 30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தமான உண்மை. என்ன வேலை இருந்தாலும், ஆரோக்கியம் தான் முதலில் முக்கியம். எனவே 30 வயதானால் பெண்கள் எதையெல்லாம் முக்கியமாக செய்யணும் என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…
News November 1, 2025
BREAKING: பொங்கல் பரிசு அறிவித்தார் அமைச்சர்

தைப்பொங்கலை முன்னிட்டு, நவ.15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். அத்துடன், இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகையாக ₹5,000 வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், விரைவில் CM ஸ்டாலின் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என <<18160908>>அமைச்சர் சக்கரபாணி<<>> கூறியிருந்தார்.
News November 1, 2025
சபரிமலையில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

சபரிமலையில் வரும் 17-ம் தேதி மண்டல, மகர விளக்கு பூஜை தொடங்குகிறது. இதனையொட்டி, தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று (நவ.1) தொடங்குகிறது. ஆன்லைனில் பதிவு செய்ய, <


