News October 31, 2025

மணல் கொள்ளை வழக்கு: ED-க்கு ஐகோர்ட் கேள்வி

image

TN-ல் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக ED தொடர்ந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, மணல் கொள்ளை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிய TN DGP-க்கு எப்படி உத்தரவிட முடியும் என ED-க்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மணல் குவாரிகளில் ₹4,730 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதற்கு ஆதாரம் உள்ளதாக ED தெரிவித்த நிலையில், 3 வாரங்களில் பதிலளிக்க TN அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்க சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கலாம். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

News November 1, 2025

BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

image

USA ரிசர்வ் வங்கி அங்குள்ள வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் குறைத்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ₹88.70 சரிந்துள்ளது. இது, அந்நிய செலாவணி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய், எலக்ட்ரானிக் பொருள்கள் இறக்குமதி விலை அதிகரிக்கும். குறிப்பாக, முதலீட்டாளர்கள் வெளியேறியதால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றன.

News November 1, 2025

இன்று முதல் அமலான புது ரூல்ஸ்.. கவனிச்சிக்கோங்க!

image

➥ஆதார் புதுப்பித்தலை ஆன்லைனில் செய்யலாம். Biometric அப்டேட் செய்வதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டது ➥இனி வங்கி கணக்குகள் & லாக்கர்களுக்கு வாடிக்கையாளர்கள் 4 நாமினிக்களை நியமிக்கலாம் ➥FASTag-ல் KYV (Know Your Vehicle) அப்டேட் கட்டாயமாக செய்திருக்க வேண்டும் ➥CRED, MobiKwik போன்ற 3-ம் தரப்பு செயலிகள் மூலமாக SBI கிரெடிட் கார்டு வைத்து கல்வி கட்டணம் செலுத்த, பரிவர்த்தனையில் 1% கட்டணமாக வசூலிக்கப்படும்.

error: Content is protected !!