News October 31, 2025
பாரதியார் பிறந்தநாள் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு

நெல்லை மாவட்ட பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பே.ரா.விடுத்துள்ள செய்தி குறிப்பு: பொதிகை தமிழ் சங்கம் சார்பில் மாநில அளவிலான பாரதியார் பிறந்தநாள் கவிதை போட்டிகள் நடைபெற உள்ளன. விருப்பமுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கவிதைகளை 36 வரிகளுக்குள் எழுதி வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் pothigaitamilsangam@gmail.com என்ற இணையதளத்தில் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Similar News
News November 1, 2025
பாபநாசம் அணையில் இன்று தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் பாபநாசம் நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனை நெல்லை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சுகுமார் தலைமையில் தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைக்க உள்ளார். இதைப்போல் 11.50 மணிக்கு மணிமுத்தாறு நீர்த்தேக்கத்திலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
News November 1, 2025
நெல்லையில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தாயுமாணவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கும் மேல் உள்ள ரேஷன் கார்டுதார்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்கள் இல்லம் தேடி வழங்கப்படுகிறது. இம்மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வருகிற நவ. 3, 4ம் தேதிகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை அனைவருக்கும் ஷேர் பன்னுங்க.
News November 1, 2025
போலி வங்கி கணக்கு மோசடி; இளைஞர் கைது – நெல்லை எஸ்.பி

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாநகரில் ஆன்லைனில் முதலீடு செய்து போலியான வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்த ஆசையை தூண்டி மோசடி செய்து ஏமாற்றும் செயலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம், கிட்டங்காயத்தை சேர்ந்த 27 வயதான ராசித் என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது.


