News October 31, 2025
பிஹாரிகளை தமிழக மண் காப்பாற்றுகிறது: RS பாரதி

பிஹார் மக்களை தமிழக மண் காப்பாற்றுவதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சொந்த மாநிலத்திலேயே ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் பிஹார் மக்கள் ஏன் தமிழகத்திற்கு வரப்போகிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தமிழகம் வளமாக இருப்பதால் தான் பிஹார் மக்கள், இங்கே வருவதாகவும் அவர் பேசியுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் பிஹார் மக்களை திமுக அரசு துன்புறுத்துவதாக PM மோடி குற்றஞ்சாட்டியிருந்தார்.
Similar News
News November 1, 2025
காலையில் இதை செய்தால் சிறுநீரகம் செத்துபோகும்

➤காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது ➤தண்ணீரே அருந்தாமல் காபி, டீ குடிப்பது ➤சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பது ➤வெறும் வயிற்றில் Pain Killer மாத்திரைகளை சாப்பிடுவது ➤உடற்பயிற்சி செய்த பின் தண்ணீர் அருந்தாமல் இருத்தல் போன்ற விஷயங்களை தொடந்து செய்தால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பலருக்கு தெரியாத இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 1, 2025
KKR அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா?

KKR அணியின் புதிய ஹெட் கோச்சாக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு, கொல்கத்தா அணியில் ரோஹித் சர்மா இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை மறுக்கும் விதமாக, KKR அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக்கானின் ஃபேமஸ் படமான ‘Don’ படத்தில் இடம்பெற்ற ‘Sun will rise tomorrow again ye toh confirm hai, but at (K)night’ என்ற வசனத்தை குறிப்பிட்டு, MI போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பதில் அளித்துள்ளது.
News November 1, 2025
தமிழக காவல் துறையில் புதிய பதவி

தமிழக காவல் துறையில் புதிதாக ‘செய்தி தொடர்பாளர்’ என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு முத்தரசி IPS நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை சட்டம், ஒழுங்கு உதவி ஐஜியாக உள்ள இவர், சென்னை செய்தி மக்கள் தொடர்பு SP ஆக நியமிக்கப்பட்டுள்ளார். காவல் துறை தொடர்பான அறிக்கைகள், புகார்கள் குறித்த நிலவரங்கள் ஆகியவற்றை ஊடகங்களை சந்தித்து வழங்கும் பணியை இவர் செய்வார்.


