News October 31, 2025
திருப்பத்தூர்: 12 சிவலிங்கங்கள் உள்ள அற்புதக்கோயில்

பிரம்மபுரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து கோயில். இதனை 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் இந்தக் கோயிலைப் பற்றியும், பிரம்மபுரீஸ்வரரைப் பற்றியும் தன் பாடல் மூலம் புகழ்ந்துள்ளார். பின் வளாகத்தில் சுயம்பு லிங்க வடிவில் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் தேவி பிரம்ம சம்பத் கௌரி தலைமை தெய்வங்களாக உள்ளனர். பின் கோயிலில் 12 சிவலிங்கங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 1, 2025
திருப்பத்தூர்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை!

திருப்பத்தூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் <
News November 1, 2025
திருப்பத்தூர்: ரயில் பயணிகளை குறிவைத்து திருடும் கும்பல்

ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையிடம் சில நாட்களுக்கு முன்பு ரயில் படியில் பயணம் செய்த வாலிபரை குச்சியால் அடித்து செல்போன் திருடியது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நேற்று (அக்-31) ஆம்பூர் ரயில்நிலையத்தில் சோதனை செய்ததில், கந்திகொள்ளை பகுதியை சேர்ந்த பரமேஷ் (20) எனும் வாலிபர் திருடியது தெரியவந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.


