News April 18, 2024
கோவையில் நாளை இலவச ரேபிடோ சேவை

தமிழ்நாடு தேர்தல் ஆணையம், பைக் டாக்சி நிறுவனமான ரேபிடோ உடன் இணைந்து இலவச பைக் டாக்சி சேவையை வழங்குகிறது. தமிழ்நாட்டின் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 5 நகரங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக இந்த இலவச சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி செல்லும் வாக்காளர்கள் ரேபிடோ செயலியில் பைக் டாக்சி புக் செய்து “VOTENOW” என்ற CODE -ஐ பயன்படுத்தினால் கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்ய முடியும்.
Similar News
News December 8, 2025
கோவை: வாக்காளர்களே! SIR UPDATE

கோவை மக்களே, தற்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் SIR படிவம் கொடுத்தவர்கள். electoralsearch.eci.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் EPIC நம்பரை பதிவு செய்தால் உடனடியாக பதிவேற்றப்பட்ட பெயர் வந்திருந்தால் காட்டி விடுகிறது. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் (Draft) தங்கள் பெயர் உள்ளதா என செக் பண்ணுங்க! SHARE IT
News December 8, 2025
கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும் டிச.13ம் தேதி அன்று GN மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில், மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. பங்கேற்பு இலவசம் ஆகும். மேலும் விபரங்களுக்கு 8056358107. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 8, 2025
கோவை: 10th போதும்… ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காக்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 24 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 10th முதல் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 2026 ஜன.12ம் தேதிக்குள் இந்த லிங்கை <


