News October 31, 2025
புதுச்சேரி: நாளை விடுதலை நாள் விழா அணிவகுப்பு

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை (நவம்பர் 1) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலையில் நாளை நடைபெறும் விழாவில், முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி, காவல்துறை மற்றும் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்ற உள்ளார்.
Similar News
News November 1, 2025
புதுவை: போக்சோ வழக்கு – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுவை, சக்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். பேண்ட் மாஸ்டரான இவர், கடந்த 2023ம் ஆண்டு வீடு புகுந்து தனிமையில் இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புதுவை விரைவு கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில், நேற்று நீதிபதி சுமதி ரமேஷுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
News November 1, 2025
புதுச்சேரி: வாழ்த்து தெரிவித்த கவர்னர்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், புதுச்சேரி விடுதலைத் திருநாளை ஒட்டி, மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தின் விடுதலைக்காக பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீர்ர்களின் தியாகங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
News October 31, 2025
புதுச்சேரி: மின்விளக்குகளால் சிலைகள் அலங்கரிப்பு

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை கடற்கரை சாலையில் கொண்டாடப்பட உள்ளது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்க உள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை, கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை, நேரு சிலை நெல்லித்தோப்பு பகுதியில் சுப்பையா சிலைக்கு, இன்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


