News April 18, 2024
தேர்தல் நேரத்தில் மின்தடையா?

பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடக்கும் நேரத்தில் மின்தடை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டி போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது.
Similar News
News August 18, 2025
கணவன் உயிரிழந்ததால் மனைவி தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (70) – கவிதா(60) தம்பதியினர். திடீரென நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் உயிரிழந்தார். இதனையறிந்த மனைவி கவிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன் இறந்தது துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்டு சம்பவம் கும்பகோணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
News August 18, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய திட்டங்களில், வீடுகள் – மனைகள் – குடியிருப்புகளின் அலகுகளில் 31.03.2025 முன்பு தவனை காலம் முடிவுற்ற திட்டங்களுக்கு, வாரியத்திற்கு செலுத்த வேண்டிய தொகையினை அபராத வட்டி இன்றி தவனை தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News August 18, 2025
தஞ்சாவூர்: இங்கே போனா தொழிலில் வெற்றிதான்!

தஞ்சாவூர் மாவட்டம் தென்னங்குடி கிராமத்தில் கால பைரவர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் விளக்கேற்றி, கால பைரவரை வழிபட்டால் கடன் பிரச்சனைகள் நீங்கி, வாழ்விலும், தொழிலிலும் வெற்றி கிடைக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தகவலை உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!